பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

Update: 2022-06-15 07:02 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள்.

திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் அப்பு சிவராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தாஸ் வரவேற்றார். இதில் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் முதல்-அமைச்சர் அறிவித்த காசில்லா மருத்துவம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அமைப்பு செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் அருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News