திருவண்ணாமலையில் நிவாரண நிதி, மளிகை பொருட்களை அமைச்சர் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதி, 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அமைச்சர் வழங்க்கினார்

Update: 2021-06-15 09:01 GMT

தமிழகத்தில் இரண்டாம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரு.2ஆயிரம் மற்றும் 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு. கலந்து கொண்டு இரண்டாம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரு.2ஆயிரம் மற்றும் 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 61ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக டோக்கன் கடந்த 5நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் தவணை 99.50 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அதனை தொடர்ந்து 2வது தவணையும் வழங்கப்படும். நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் துணை தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றம் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News