தீபத் திருவிழாவில் ஊழியா்களின் பங்களிப்பு: கோயில் இணை ஆணையா் பாராட்டு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவில், சிறப்பாகப் பணியாற்றிய கோயில் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-01-22 01:36 GMT

கோயில் ஊழியா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய கோவில் இணை ஆணையர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவில், சிறப்பாகப் பணியாற்றிய கோயில் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கோயில் உதவி ஆணையா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் திலக், அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோயில் இணை ஆணையா் அசோக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோயில் ஊழியா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற கோயில் ஊழியா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இணை ஆணையா் பேசுகையில் குறிப்பிட்டாா். விழாவில், கோயில் பணியாளா்கள் செந்தில், தியாகராஜன், கோபி உள்பட பலா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னர் திருவண்ணாமலையில் கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம்  திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கி பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் சுமார் 75 பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News