அரசு மருத்துவமனைக்கு நவீன சக்கர நாற்காலிகள்

திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனைகளுக்கு மின்கலன் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலிகளை ஆட்சியர் வழங்கினார்

Update: 2023-05-16 06:45 GMT

அரசு மருத்துவமனைகளுக்கு மின்கலன் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் மற்றும் வேட்டவலம் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு மின் கலன் வசதியுடன் கூடிய மூன்று சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர்மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் இந்திரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் மனுலிங்கம் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆட்சியர் முருகேஷ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கீழ்பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலா ஒரு மின்கலன் வசதியுடன் கூடிய நாற்காலிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பயிற்சி ஆட்சியர் ரஷ்மி ராணி வருவாய் கோட்டாட்சியர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் பணியாற்றிய விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் நான்கு நபர்களுக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டி ஆட்சியர் முருகேஷ் அவர்கள் சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசினை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவில் இல்லம் சார்ந்த குழந்தைகளுக்கு உலக அமைதிக்கான குழந்தைகளின் பங்கு என்ற தலைப்பில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஓவிய பாட வரைபட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த திருவண்ணாமலை ரெட் ரோஸ் ஹோமை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி இரண்டாம் இடம் பிடித்த நிர்மலா ஹோமில் சேர்ந்த மாணவி புவனேஸ்வரி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் மட்டும் கேடயம் வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News