வாக்காளர் வரைவு பட்டியல் 2022 வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று வெளியிட்டார்

Update: 2021-11-01 13:13 GMT

வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்ட கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2022 வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் வெளியிட மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது குறித்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து குமாரசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News