திருவண்ணமலையில் குடியரசு தின அலங்கார ஊர்திக்கு மலர் தூவி வரவேற்பு

திருவண்ணாமலைக்கு வந்த சென்னை குடியரசு தினவிழா சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தியை கலெக்டர் முருகேஷ் மலர் தூவி வரவேற்றார்

Update: 2022-02-17 13:07 GMT

அலங்கார ஊர்தியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தி விடுதலை போரில் தமிழகம் என்ற தலைப்பில் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் அலங்கார  ஊர்தி ஆரணியில் இருந்து போளூர், கலசப்பாக்கம் வழியாக திருவண்ணாமலை ஈசானிய மைதானத்திற்கு இன்று வந்தது , 

திருவண்ணாமலை ஈசானிய அருகில் உள்ள மைதானத்தில்வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியினை மாநில அமைச்சர் எ.வ.வேலு, பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, எம்.பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் எம்எல்ஏ   உறுப்பினர் சரவணன், மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ,மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தார்.

வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை வரவேற்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சிலம்பாட்டம், மகளிர் திட்டத்துறையின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், விடுதலை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பொதுமக்களும், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களும் அதிக அளவில் பார்வையிட்டு வருகிறார்கள். இன்று மாலை 6 மணி வரை பார்வையிட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News