திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சுரி அடிக்கும் காய்கறி விலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, தவிப்பில் பொதுமக்கள்.

Update: 2021-11-19 05:33 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையைப் போல விடுவிடுவென்று தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது. காய்கறிகளும் இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புவரை தக்காளி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் எந்த காய் எடுத்தாலும் கால் கிலோ 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் கிலோ ரூ.80-க்கு விற்றாலும் அவை தரமானதாக இல்லை. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,  அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து விட்டது.

விருப்பம் இருந்தால் வாங்குஇல்லை என்றால் சென்று விடு என்று வியாபாரிகள் கூறுகின்றனர். விலை உயர்வால் காய்கறிகள் வாங்கி சமைக்க முடியாத நிலை உள்ளது  , என்றனர். சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெங்களூர்,  சென்னை போன்ற நகரங்களில் இருந்து தான் காய்கறிகள் வரத்து இருக்கும்.

தற்போது கனமழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக நின்றுபோய் உள்ளது. திருவண்ணாமலை மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் எங்களது 50 வருட அனுபவத்தில் காய்கறிகளின் விலை எந்த அளவுக்கு உயர்ந்தது இல்லை. தற்போது மொத்த விலையாக கத்திரிக்காய் ரூபாய் 70 க்கும்  , பீன்ஸ் ரூ 100 , கேரட் ரூபாய் 80 , வெண்டைக்காய் ரூபாய் 100 க்கும் விற்கப்படுகிறது.

ஒரு சில காய்கறிகள் தவிர பெரும்பாலான காய்கறிகள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது தொடர் மழையால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறினர்.

Tags:    

Similar News