திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பந்தக்கால் விழா

Arunachaleswarar Temple Tiruvannamalai -திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கான பந்தக்கால் விழா நடைபெற்றது.

Update: 2022-09-30 02:20 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கான பந்தக்கால்  இன்று நடப்பட்டது.

Arunachaleswarar Temple Tiruvannamalai-திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் பூா்வாங்கப் பணிகளை தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 24-ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், தீபத் திருவிழாவுக்குத் தேவையான பூா்வாங்கப் பணிகளை செய்வதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன. 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் பணியாளா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News