போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் கைது

திருவண்ணமலையில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2021-09-29 07:37 GMT

திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி வயது (27). இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார் இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த தம்பதியனருக்கு இதுவரையில் குழந்தை இல்லை.

இந்நிலையில் திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீரமணி ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. பலமுறை அந்த மாணவியை பின் தொடர்ந்து காதலிக்க கூறியுள்ளார். ஆனால் மாணவி இந்த காதலை ஏற்க மறுத்தாலும், காதலிக்க வேண்டும் எனக் கூறி மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி ஒருநாள் உங்களுக்கு தான் திருமணம் ஆகிவிட்டது எதற்காக என்னை தொல்லை செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வீரமணி மாணவியிடம் உன்னை நான் உன்மையாக காதலிக்கிறேன் உன்னை என்னால் மறக்கமுடியவில்லை என்று தேவையற்ற ஆசைவார்த்தைகள் கூறிவந்ததாகத் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதை யாரிடமும் கூறக்கூடாது என கூறி மாணவியை எச்சரிக்கவே,பயந்துபோன மாணவி யாரிடமும் கூறவில்லை.  இதை சாதமாக்கி, மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

ஒருகட்டத்திற்கு மேல் தொல்லை தாங்கமுடியாத மாணவி, அவரது பெற்றோரிடம் இச்சம்பவம் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர், பாதிக்கப்பட்ட மாணவியை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் நடத்திய சோதனையில் மாணவி 2 மாதம் கருவுற்றிருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வீரமணியை கைது செய்து. காவல்நிலையத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை வன்கொடுமை செய்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News