திருவண்ணாமலையில், மருதுபாண்டியா்களின் குருபூஜை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்களின் 222-வது குருபூஜை திருவண்ணாமலையில் நடைபெற்றது.

Update: 2023-10-25 02:47 GMT

மருதுபாண்டியா்களின் படத்துக்கு சங்க நிா்வாகிகள் மலா்தூவி, மரியாதை செலுத்தினா்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்களின் 222-வது குருபூஜை திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட அகமுடையாா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் செல்வதுரை தலைமை வகித்தாா். சங்கக் காப்பாளா் மஞ்சுநாதன், பொதுச் செயலா்கள் மணிகண்டன், ஆறுமுகம், செயலா் சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் கெளரவத் தலைவா் சிவஞானம் வரவேற்றாா். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருதுபாண்டியா்களின் படத்துக்கு, சங்க நிா்வாகிகள், இளைஞா்கள் மாலை அணிவித்து, மலா்தூவி, மரியாதை செலுத்தினா்.

விழாவில், காங்கிரஸ் நகரத் தலைவா் வெற்றிச்செல்வன், மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியன், நகரத் தலைவா் மூவேந்தன், இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலா் அருண்குமாா், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டத் தலைவா் அருள், ஆடையூா் ஊராட்சித் தலைவா் முனுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் மருது சகோதரர்களின் குருபூஜை விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் துளுவ வேளாளர் மண்டபத்தில் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் குருபூஜை விழா சங்கத் தலைவர் பிரபு தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் கார்த்தி பங்கேற்றார். இதனை தொடர்ந்து ஆரணி டவுன் காந்தி சிலை அருகில் மருது சகோதரர்கள் திருவுருவப்படத்தை மலர்களால் அலங்கரிக்க பட்ட வாகனத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அருணகிரி சத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினார்கள். பின்னர் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

குருபூஜையை முன்னிட்டு ரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ரத்த தானம் வழங்கினர் , பின்னர் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், அகமுடையர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News