அருணாசலேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அலங்காரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

Update: 2022-03-27 02:51 GMT

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காலபைரவர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தக் குளம் அருகில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு,  தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பவுர்ணமியை அடுத்த  வரும் அஷ்டமி திதியில் மகா கால பைரவரை வணங்குவது மிகவும் விசேஷமானது என்று கருதப்படுகிறது.

நேற்று தேய்பிறை அஷ்டமி தினம் என்பதால்,  இரவு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு பச்சரிசிமாவு, அபிஷேக பொடி, மஞ்சள், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் முந்திரி மற்றும் வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீ மகா கால பைரவருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News