துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு கலசப்பாக்கத்தில் துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது

Update: 2024-04-16 02:23 GMT

கலசப்பாக்கத்தில்  நடைபெற்ற துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணி வகுப்பு 

மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூா், செய்யாறு மற்றும் வந்தவாசியில் துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கலசப்பாக்கம்

தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துணை ராணுவத்தினா் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் துணை ராணுவ வீரா்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனா்.

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பகுதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படையினர் மற்றும் போலீசாரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி ஆரணி காவல்துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

உடன் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி கலந்து கொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்தனர்.

செய்யாறு

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அவர்கள் உத்தரவின்படி, செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்கள் தலைமையில் பெரணமல்லூர் காவல் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரையில் இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தண்டராம்பட்டு

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை கிராமிய உட்கோட்டத்தை சேர்ந்த தண்டராம்பட்டு மற்றும் தானிப்பாடி பகுதிகளில் துணை ராணுவ படைப்பிரிவினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் அவர்கள் உடன் இருந்தார்.

மேற்கண்ட அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 300- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News