திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Happy Birthday Anna in Tamil -திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.

Update: 2022-09-15 05:02 GMT

திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில்  அண்ணா சிலைக்கு  அக்ரி .கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.

Happy Birthday Anna in Tamil-மறைந்த முதல் அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர், மாவட்ட கழகசெயலாளர், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி .கிருஷ்ணமூர்த்தி. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் செல்வம், மாவட்ட கழக நிர்வாகிகள் ,ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி, நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள்,  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News