நான்காம் கட்ட முகாமில் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில்நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கலெக்டர் தகவல்

Update: 2021-10-04 06:19 GMT

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1,04,325, பேருக்கும், 

19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் 77,0855 பேர்களுக்கும், 

26 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் 75,896 பேர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

3  ஆம் தேதி  நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் 1,017 இடங்களில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய சிறப்பு முகாம் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.

திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 33,120 பேர்களுக்கும்,  செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 20,772 பேர்களுக்கும் என மொத்தம் 53,892 பெண்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.  என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News