திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4-ம் நாள் தீப திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4-ம் நாள் தீப திருவிழாவை முன்னிட்டு இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலா நடந்தது.

Update: 2021-11-14 01:45 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4-ம் நாள் தீப திருவிழாவை முன்னிட்டு இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலா நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4-ம் நாள் தீபத் திருவிழா  நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நான்காம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலா நடந்தது.

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் 17ம் தேதி முதல் கிரிவலம் செல்லவும், சுவாமி தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், முன்னதாகவே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ம் தேதி, கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா ஊரடங்கால், சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலினுள் வலம் வரும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 முதல் வரும் 17ம் தேதி வரை, 'ஆன்லைன்' பதிவு மூலம், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேர், உள்ளூர் பக்தர்கள் 3,000 பேர் என மொத்தம், 13 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

வரும் 17 முதல் 20ம் தேதி வரை, சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மஹா தீபத்தன்று வரும் வெளியூர் பக்தர்கள் முன்னதாகவே, திருவண்ணாமலைக்கு வந்து தங்க தொடங்கி உள்ளனர்.

நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் மற்றும் காலி வீடுகள், கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றை தேடி புக் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் ஒரு அறைக்கு, 300 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கும் லாட்ஜ்களில், தற்போது 2,000 முதல் 3,500 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News