நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.

Update: 2024-04-18 01:25 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- ஐ முன்னிட்டு, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 & 3-ஆகியோர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் (General Observers) முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தலைமை வாக்கு சாவடி அலுவலர்கள் மற்றும் இதர வாக்குப்பதிவு அலுவலர்கள் என திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 11,408 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்

இந்நிகழ்ச்சியில் ஆரணி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி,  வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி,  மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், நுண் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News