திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி, 53.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Update: 2024-04-19 11:36 GMT

தனது வாக்கினை பதிவு செய்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

தற்போது மாலை 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி  53.72 %

திருவண்ணாமலை 40.44 %, ஜோலார்பேட்டை 42 % , திருப்பத்தூர் 40.2 .%, செங்கம் 42.6% கலசப்பாக்கம் 43.1 % , கீழ்ப்பெண்ணாத்தூர் 42.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆரணி மக்களவைத் தொகுதி  56.73  %

ஆரணி 40.45 % , போளூர் 48.2 %, செய்யாறு 42.24 , வந்தவாசி 38.8 , செஞ்சி 52.11 மயிலம். 43.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 30 நிமிடம் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை வாக்களிக்க வராதவர்களை வாக்களிக்க வைப்பதற்காக அரசியல் கட்சியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்கினை பதிவு செய்த துணை சபாநாயகர்

தமிழ்நாடு சட்டமன்ற துணைத் தலைவர் பிச்சாண்டி திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை நிறைவேற்றினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை தனது சொந்த ஊரான தேவனாம்பட்டு காட்டுப்புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார் .

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் கீழ் நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தனது சொந்த ஊரான பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளியின் தனது குடும்பத்துடன் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில்  பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Similar News