திருநேர் அண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்த அற்புத காட்சி

திருவண்ணாமையில் அருணாசலேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் காட்சியை, பக்தர்கள் கண்டு வழிபாட்டனர்.

Update: 2022-04-14 08:27 GMT

திருவண்ணாமலை கிரிவல்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதப் பிறப்பின் முதல் நாளன்று, திரு நேர்  அண்ணாமலையார் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம். அதன்படி, சித்திரை மாத முதல்நாளான இன்று அதிகாலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு காலை 7 மணிமுதல் 7.10 மணி வரை நடைபெற்றது. அப்போது, திருநேர் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதை காண அதிகாலை, 5:00 மணியிலிருந்தே ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். சூரிய ஒளி மூலவர் மீது விழுந்ததும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News