திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை, மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக அதிகாரிகள் சரி சயெ்த

Update: 2024-06-03 03:09 GMT

கால்வாய் பகுதியில்  விழுந்த மரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று  சூறைக்காற்றுடன் பலத்த கோடை மழை பெய்தது. இதில் அரசமரம் மற்றும் ஆலமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த போளூர் முதல் செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வன்னியனூர் ஊராட்சியில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் அங்கு உள்ள அரசமரம் மற்றும் ஆலமரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த நிலையில் இருந்தது . உடனடியாக அப்பகுதிய மக்கள் போளூர் நெடுஞ்சாலைத்துறை மின்சார துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மின்சாரம் நிறுத்தப்பட்டு,

அதன்படி போளூர் சாலை பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், மற்றும் போளூர் உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, உடனடியாக மரத்தை அப்புறப்படுத்திவிட்டு சாலை சரி செய்து போக்குவரத்திற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அமைத்துக் கொடுங்கள் என்று உத்தரவிட்டனர்.

அதன்படி கலசபாக்கம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் மழை நேரத்திலும் போக்குவரத்துக்கு எந்த ஒரு இடையூறும் வரக்கூடாது என்பதற்காக கொட்டும் மழையில் ஜேசிபி எந்திரத்தின் மூலம் மரத்தை அப்புறப்படுத்திவிட்டு சாலையை சுத்தம் செய்து போக்குவரத்து செல்வதற்கு உண்டான வழியை அமைத்துக் கொடுத்தனர். இந்தப் பணி சுமார் இரவு 12 மணி வரை நடைபெற்றது. காலை முதல் போக்குவரத்து சீரானது.

செங்கம் பகுதியில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த சூறைக்காற்று மழையால் கீழ் காவக்கரை பகுதியில் செய்யாற்றிலிருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாயில் புளிய வரம்  விழுந்தது.

இந்த மரம் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறைப்பு சொந்தமானதா அல்லது அப்பகுதியில் உள்ள தனிநபருக்கு சொந்தமானதா என்று தெரியவில்லை.

ஆனால் செய்யாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் மரம் விழுந்துள்ளதால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மரத்தை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பலத்த மழை பெய்து கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News