கலசப்பாக்கத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு!
கலசப்பாக்கத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப்
கலசபாக்கத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கேட்டவாரம்பாளையம், , தேவராயம்பாளையம், வெங்கட்டாம்பாளையம், நல்லான்பிள்ளைபெற்றால், காந்தபாளையம், சிறுவள்ளூர், மற்றும் பல ஊராட்சிகளில் கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆய்வு செய்தார் , ஆய்வின் போது,
கலசபாகத்தில் கடந்த 2017 முதல் 2023 வரை அரசு வழங்கும் வீடு 80 வீடுகள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளையும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்து இன்னும் பல்வேறு வீடுகள் ஏன் கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் உள்ளது, அதேபோல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க கூறி வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தனி ந ப ர் கழிவறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்து கழிவறை வசதி வேண்டுமென்று பெற்று உள்ளீர்கள் அதன் பணிகள் ஏன் இன்னும் காலதாமதம் ஆகிறது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கால தாமதம் செய்யாதீர்கள் என்று கூறினர்.
மேலும் கலசபாக்கத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் அங்கன்வாடி மையம் பள்ளி கட்டிடம் உயர் மட்ட பாலம் விளையாட்டு மைதானம் தனி நபர் கழிப்பறை கிராம கழிவறை போன்ற வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதேபோல் பணிகள் அனைத்தும் தரமாகவும் வலுவாகவும் அமைத்து கட்டுமான பணிகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.
அதன் தொடர்ச்சியாக கிராமங்களில் பொது கழிவறை தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு அதன் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது அதை ஏன் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைத்துக் கொடுங்கள் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் பஞ்சாயத்து செயலாளர்களுக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பயனாளிகளுக்கும் கூடுதல் ஆட்சியர் ரிஷப், அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, இன்ஜினியர்கள் சௌந்தர், லட்சுமி பிரியா, ஓவர்சீஸ் ஆறுமுகம், வாசுகி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, பஞ்சாயத்து தலைவர் அயில், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அர சு அலுவலர்கள் உடனிருந்தனர்.