மழையால் வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவி உயிரிழந்தார்.

Update: 2024-06-06 11:22 GMT

வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவி உயிரிழப்பு (மாதிரி படம்)

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சி, மதுரா வடகரை நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சுசி. இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தனது வீட்டின் அருகே விரவி எடுத்துக் கொண்டிருந்தார்.

மேல்சோழங்குப்பம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் இவரது வீட்டின் சுவர் திடீரென இடிந்து மாணவி சுசி மீது  விழுந்தது . இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு வீரலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், பின்னர் அங்கே மேல் சிகிச்சை வசதி இல்லாததால் கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் சுசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் விறகு எடுக்கச் சென்ற மாணவி சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொடிக் கம்பம் நட்ட போது மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கூட்டுச் சாலையில் கட்சிக் கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். நான்கு போ் காயமடைந்தனா்.

சேத்துப்பட்டு- போளூா் சாலையில் உள்ள கிழக்குமேடு கூட்டுச் சாலையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி, திமுக கொடியேற்றுவதற்கு கட்சியினா் கொடிக் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக போல்ட் நெட் உடைந்து கொடிக் கம்பம் மேலே சென்ற மின் வயரில் சாய்ந்து உரசியது.

மின் கம்பியில் கம்பம் உரசியதால் அதைப் பிடித்திருந்த இடையன்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரகுராமன், கிழக்கு மேடு கிராமத்தைச் சோ்ந்த கிளைச் செயலா் மணி, கோதண்டராமன், ராஜி, அப்துல்லா , ஆகிய 5 பேரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். இதில் ரகுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயம் அடைந்த கோதண்டராமன், ராஜி, மணி அப்துல்லா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ரகுராமன் தந்த ஏழுமலை சேத்துப்பட்டு கொண்டிருக்கின்றார்.

சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News