குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருத்தணி அருகே சிறு குமி ஊராட்சி முறையான குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஒன்று கூடி நாளை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2024-05-05 01:30 GMT

திருத்தணி அருகே சிறுகுமி ஊராட்சி மக்கள் குடிதண்ணீர் வரவில்லை என்று மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் உள்ள

வி.சி.ஆர் கண்டிகை கிராமத்தில் கடந்த ஏழு நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை என்று இந்த பகுதி பெண்கள், ஆண்கள் மக்கள் அனைவரும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை இது குறித்து தெரிவித்தும் உரிய நடவடிக்கை ஊராட்சி நிர்வாகம் தலைவர் குடிதண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து ஆத்திரமடைந்த

இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் என 70-க்கும் மேற்பட்டோர்

கே.ஜி.கண்டிகையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பஞ்சாயத்து கூட்டு சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

40 நிமிடம் இவர்கள் சாலை மறியல் செய்த பிறகு அந்த பகுதியை சார்ந்த ஊராட்சியை சேர்ந்தவர்களும் தலைவர்களும் பேச்சு வார்த்தைக்கு வந்த போது குடிதண்ணீர் வராமல் நாங்கள் வரி கட்டுகிறோம் எங்களுக்கு குடிதண்ணீர் விடுவதில்லை தொடர்ந்து பலமுறை நாங்கள் குடிதண்ணீர் பிரச்சினை பற்றி கூறினால் நீங்கள் தகுந்த பதில் கூறவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

குடிதண்ணீர் விடுவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியதை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலும் சாலை மறியலால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News