பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றி அகற்ற கோரிக்கை

வீரமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மின்மாற்றியை இடம் மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-11-02 04:30 GMT

பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மின்மாற்றி.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மிக அருகில் மின்மாற்றி ஒன்று உள்ளது.

அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் வளாகத்தில் உள்ள மின்மாற்றி அருகே விளையாடி வருவதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அந்த மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், மின்வாரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும் இதுவரை அந்த மின்மாற்றி இடம் மாற்றவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே மாணவர்களின் நலனை கருதி அப்பகுதியில் உள்ள மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News