திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா..!
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது விரதம் இருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.
முருகனின் ஆறுபடைகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலம், புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் விழா நாட்களில் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கந்த சஷ்டி தொடக்க விழாவை முன்னிட்டு அதி காலை மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு அதிகாலை பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், திருநீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டாடையில் சிறப்பு மலர் அலங்காரத்தில், திரு ஆவணங்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவர் சண்முகப் பெருமாளுக்கு காவடி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு மலைப்பகுதியில் உற்சவர் முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், நவம்பர் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு மலைக் கோவிலின் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கந்த சஷ்டி விரதம் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழா கான ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் தலைமையில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.