முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-05-24 03:45 GMT

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார்.

ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநரும் நடிகருமான தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா, திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். 


ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கி போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விறுவிறுவென கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின் அவருக்கு ஆலய அர்ச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர். திருத்தணி முருகன் கோவில் அறங்காவல் குழு துணை தலைவர் சுரேஷ் உடனிருந்து சாமி தரிசனம் செய்தபிறகு கிளம்பி சென்றார்.


சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற அடையாளம் இல்லாமல் தனியாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News