வட்டாட்சியர் அலுவலத்தில் பெண்கள் முற்றுகை போராட்டம்
மகளிர் உரிமை தொகை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்பட வில்லை எனக்கூறி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ₹1000.ரூபாய் வங்கி கணக்கில் விழுந்ததாகவும்.எல்லாம் தகுதியும் இருந்தும் எங்களுக்கு ஏன் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்து பொதுமக்கள் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 15 தேதியன்று பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகையான ₹1000 -ஐ தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டதும் .விடுபட்டுள்ள பொது மக்களுக்கு செப்டம்பர் (18:09:2023) முதல் (29:09:2023) வரை விண்ணப்பங்களை இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் இ சேவை மையங்களில். விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றன.
சரியான முறையில் இ-சேவை மையத்தில் உள்ள கணினிகள் செயல்படாத காரணத்தால் காலையிலிருந்து மதிய வரை காத்திருந்த பொதுமக்கள், அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்
இந்நிலையில், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான முழு தகுதி உள்ள நிலையில் எங்களை தமிழக அரசு எதற்காக நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த குறுஞ்செய்திகள் எங்கள் கைபேசிக்கு இதுவரை வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.