மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி..!

பெரியபாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பல்வேறு பொருட்கள் விற்பனை கண்காட்சி முகாம் நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-13 05:00 GMT

திருவள்ளூரில் நடந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை.

பெரியபாளையத்தில் ஆடித்   திருவிழாவை முன்னிட்டு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் விற்பனை மற்றும் சிறப்பு கண்காட்சி முகாம் நடைபெற்றது. இதில்  திரளான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் தற்போது ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இம்மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி16-ம் தேதி வரையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது.


இந்த விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக தண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் புவனேஸ்வரி ரவி, மற்றும் திட்ட இயக்குனர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து கண்காட்சியை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்த பல்வேறு பொருட்களின் விற்பனையை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மகளிர் சுய உதவிக் குழுவினர் கடைகளை அமைத்திருந்தனர். பலர் அவர்கள் தயாரித்த பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராமதாஸ், எல்லாபுரம் வட்டார இயக்க மேலாண்மை அலகு நிர்வாகிகள் அபிராமி, நாகராஜ்,உஷாராணி,மாலா, ஜெயசித்ரா,வனிதா,உமாவதி, காஞ்சனா மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News