பாம்பு கடித்து வட மாநில தொழிலாளி பெண் மரணம்

தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளியை பாம்பு கடித்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2023-09-29 18:00 GMT

பைல் படம்

பெரியபாளையம் அருகே தூங்கி கொண்டிருந்த வடமாநில தொழிலாளி கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரனை பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடவு பணிக்காக மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் தங்கி விவசாய நடவு பணிகளை செய்து வருகின்றனர்.சுகிபேஸ்ரா (42) என்பவர் வேலை முடிந்து தொழிலாளர்கள் தங்கி இருக்கும் அறையி ல் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.

உயிருக்கு போராடிய வரை உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பெரியபாளையம் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Tags:    

Similar News