கோவிலில் கற்பூரம் ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்த பெண் உயிரிழப்பு
பெரியபாளையம் அருகே கோவிலில் கற்பூரம் ஏற்றிய போது சேலையில் தீப்பிடித்து காயமுற்றை பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
பெரியபாளையம் அருகே கோவிலில் கற்பூரம் ஏற்றிய போது சேலையில் தீப்பற்றி பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் வசித்து வருபவர் வரலட்சுமி (58). இவர் கடந்த 26.-ஆம் தேதி தமது வீட்டின் அருகே இருந்த பவானி அம்மன் ஆலயத்தில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக கற்பூரத்தில் இருந்து சேலையில் தீப்பற்றி உடலில் தீ வேகமாக பரவியது.
இதனால் வரலட்சுமி கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வரலட்சுமி சேலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதில் வரலட்சுமி உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவரை 108 ஆம்புலன்ஸ் வர வைத்து அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர். வரலட்சுமி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வரலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்ற பெண் பக்தர் சேலையில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.