கணவனின் கள்ளக்காதலி மீது மனைவி பெட்ரோல் ஊற்றிக்கொல்ல முயற்சி..!
திருவள்ளூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனின் கள்ளக் காதலியின்மீது மனைவி பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பு.;
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கணவனின் கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சித்த வழக்கில் மனைவி,கணவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார். திருவள்ளூர் நகர போலீசார் நடவடிக்கை.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 40). இவரது மனைவி பார்வதி ( வயது 36).இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
சுரேஷ், திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் அதே புல்லரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 3 மகன்களுக்கு தாயான ராஜேஸ்வரி என்பவருடன் சுரேஷ் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சுரேஷ், அதே காய்கறி மார்க்கெட்டில் தனது கள்ளக்காதலி ராஜேஸ்வரிக்கு கடை வாடகைக்கு எடுத்து காய்கறி வியாபாரம் செய்ய வைத்துள்ளார். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷின் மனைவி பார்வதி என்பவர், தனது கணவருடன் தகாத உறவில் உள்ள ராஜேஸ்வரி என்பவரை காய்கறி கடைக்கு வரக்கூடாது என தகராறு செய்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து மீண்டும் காய்கறி கடைக்கு சுரேஷ் தனது கள்ளக்காதலி ராஜேஸ்வரியை அழைந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷின் மனைவி பார்வதி ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல திட்டம் தீட்டி தனது தந்தை பூச்சியுடன் மார்க்கெட்டுக்கு கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்.
பெட்ரோல் வாங்கி வந்த பார்வதி ராஜேஸ்வரி கடையில் இருக்கும்போது தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது பார்வதி தனது தந்தையிடம் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி ராஜேஸ்வரியின் மீது ஊற்றியுள்ளார்.
அப்போது கடையில் சாமி படத்திற்கு ஏற்றி வைத்திருந்த விளக்கில் பெட்ரோல் பரவி ராஜேஸ்வரி உடலுக்கு மளமளவென தீ பற்ற எரிந்து துடித்துள்ளார்.இதனையடுத்து உடனடியாக மார்க்கெட்டில் இருந்த மற்ற வியாபாரிகள் அவர் உடலில் எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் 50% க்கு மேல் தீக்காயம் அவரின் உடலில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மனைவி பார்வதியின் தந்தை பூச்சியை தேடி வருகின்றனர்.
கணவரின் கள்ளக்காதலியை மனைவி பட்டப் பகலில் காய்கறி மார்க்கெட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கில் பார்வதி, சுரேஷ், விஜயா மோகன்,முரளி , நதியா, லட்சுமி ,சங்கர் ஆகிய 8 பேரை திருவள்ளுர் டவுன் போலீசார் கைது செய்தனர்.