தெருக்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

மெய்யூர் ஊராட்சியில் மண்ணடி, பண்டார தெருக்களில் கழிவு நீர் செல்ல நடவடிக்கைகோரி ஊராட்சி தலைவரிடம் மனு

Update: 2023-11-05 10:30 GMT

மெய்யூர் ஊராட்சியில் உள்ள தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால்  தொற்று நோய் பரவும் அபாயம்

திருவள்ளூர் அருகே காய்ச்சல் பரவுவதை தடுக்க தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என மெய்யூர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம்,மெய்யூர் ஊராட்சியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த மெய்யூர் ஊராட்சியில் உள்ள மண்ணடி தெரு,பண்டார தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீடுகளுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகரித்துள்ளது. அத்துடன் துர்நாற்றமும் வீசுகிறது.

எனவே, இக்கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமானோருக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே,கழிவு நீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்பதை அகற்றி கால்வாயை சீரமைத்து துர்நாற்றம் வீசுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த சுபாஷினி சிவகுமார் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபுவிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.

எனவே,போர்க்கால அடிப்படையில் கழிவு நீர் கால்வாயில் தேங்கியுள்ள நீரை அகற்றி நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு, மனுதாரர் மற்றும் கிராம மக்களிடம்  உறுதி  அளித்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்  தெரிவிக்கையில், மேற்கொண்ட தெருக்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளபோது, அதனை சுத்தம் செய்யாத காரணத்தால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  மேலும் அதில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதால்  அப்பகுதியில்  வசிக்கும் மக்கள் நிம்மதியாக உணவு கூட உட்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.. எனவே ஊராட்சி நிர்வாத உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.




Tags:    

Similar News