ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

கீழ்மேனி ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மண் அள்ளும் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம்.

Update: 2023-05-27 07:15 GMT

பெரியபாளையம் அருகே கீழ்மேனி ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் 

பெரியபாளையம் அருகே கீழ்மேனி ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஹிட்டாச்சி இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சின்னம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கி மேனி கிராமத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்று முறை மண் அள்ளப்பட்டதால் சமீபத்தில் பெய்த மழை தண்ணீர் ஏரியில் நிரம்ப இல்லாமல் போனது.

தற்போது இந்த ஏரியில் சவுட்டுமன் அல்ல மாவட்ட நிர்வாகம் தனிநபர் ஒருவருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த ஏரியில் மண் எடுக்க நேற்று  மண் அள்ளும் இயந்திரம் வர வைக்கப்பட்டு ஏரிக்குள் செல்ல சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவலறிந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு  இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில் தாங்கள் கிராமத்தில் உள்ள ஏரி நீரை நம்பி பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களில் காய்,கனிகள், நெற்பயிர்கள் விவசாயம் செய்து வருவதாகவும், மூன்று முறை மண் எடுத்த காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் பாசனம் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் கோடை காலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் தாங்கள் கிராமத்திற்கு உருவாகியுள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை புகார் தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மண் எடுக்கும் அனுமதியை  ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்  மீறினால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி பெரிய அளவில் போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தனர். இச்சம்பவத் தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News