கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு

கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலரிடம் மனு அளித்தனர். மனு

Update: 2023-08-11 03:15 GMT

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துவிட்டு வரும் கிராம சுகாதார செவிலியர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் முறையீட்டு மனுவை  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேர்முக அலுவலர் காயத்ரி சுப்பிரமணியிடம் அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் தாய், சேய், மக்கள் நலனை பாதுகாக்கும் பணிகளில், கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செவிலியர் பணியில் மிகுதியாக டேட்டா என்ட்ரி பணிகள் அதிக அளவில் இருப்பதால் பணி சுமைச்சுமை அதிகம் இருக்கிறது. அதனால் முழுமையாக எங்களால் பணிகளை கவனிக்கமுடியாமல் சிரமத்துக்கு உள்ளாகிறோம். அதனால், கூடுதல் பணிகளை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி மனுவை அளித்துள்ளனர். 

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட சார்ந்த சுகாதார செவிலியர் சங்க தலைவர் தனலட்சுமி கூறியதாவது :-

கிராமப்புறத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களின் பணிச்  சுமைகளை குறைக்கும் விதமாக அனைத்து ஆரம்ப சுகாதார  நிலையங்களிலும் தற்போது, குழந்தைகள், கர்ப்பிணியர் போன்றவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து, 'யூ - வின்' செயலியில் பதிவேற்ற  தனியாக, 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி ஆனது கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக போய்ச்  சேருவதில் தாமதம்ஆகி  உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் செவிலியர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றும் போது கர்ப்பிணி பெண்ணிற்கான நிதி உதவி எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கேட்பதால் நாங்கள் பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாகவும், மகப்பேறு நிதி உதவியானது அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் முறையாக விரைவில் கிடைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். 

மேலும் 5000 கிராம மக்களுக்கு ஒரு கிராமப்புற  செவிலியர் என்று நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது 15000, 20000 மக்களுக்குஒரு செவிலியர் என்று பணிச்  சுமைகளை அதிகப்படுத்துவதாகவும் களப்பணியானது மலை 5 மணி அளவில் முடிப்பதாகவும் அதற்கு மேலாக டேட்டா என்ட்ரி எங்களால் எப்படி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். 

எனவே, மாவட்ட ஆட்சியர் எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் மனு மீது விரைவில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 

Tags:    

Similar News