பிரபல இயக்குனர் பசி துரை காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் ஜேஎஃப்சி துரை வயது மூப்பு காரணமாக காலமானார்.
திரைத் துறையில் 5 மாநில விருதும், ஒரு தேசிய விருதும் பெற்ற படங்களை இயக்கிய இயக்குனர் துரை வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் 1940- ஆம் ஆண்டு பிறந்த ஜே.துரை தனது திரைத்துறை வாழ்வினை முதலில் சவுண்ட் இன்ஜினியராக தொடங்கி பின்னர் திரைப்பட எடிட்டராகவும், கன்னட மொழியில் துணை இயக்குனர் உள்பட பல்வேறு பரிமாணங்களில் திரைத்துறையில் பயணித்த ஜேஎஃப்சி துரை அவளும் பெண்தானே என பெண்ணை போற்றும் விதமாக பெண்ணை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து முதலில் தமிழ் மொழியில் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் உள்பட 5 மொழிகளில் 40க்கும் மேற்பட்ட சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சமூகத்தை உலகத்தவருக்கு எடுத்துரைக்கும் வகையிலான திரைப்படங்களை இயக்கி பெருமை பெற்றவர் ஜேஎஃப்சி துரை.
சதுரங்கம், அவள் ஒரு காவியம், ஒரு வீடு ஒரு உலகம், எங்கள் வாத்தியார், பசி போன்ற திரைப்படங்கள் மாநில விருதினையும் பசி என்ற திரைப்படம் தேசிய விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி 5 மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய ஜேஎஃப்சி துரை வயது மூப்பின் காரணமாக 84 ஆவது வயதில் உயிரிழந்தார் .
இவரின் உடல் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று 23-ஆம் தேதி காலை சுமார் 11.மணியளவில் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் எனவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.