திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி : கலெக்டர் துவக்கி வைத்தார்

திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-11 06:15 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் திரையரங்கு முன் தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் தொடரங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையம் அருகில் சன்னதி தெரு பகுதியில் சினிமா திரையரங்கம் இயங்கி வருகிறது. இதில் திரையரங்கு முன்பு கொரோனா தடுப்பூசி முகாமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்,ட

மேலும் சினிமா திரையரங்கில் சினிமா பார்க்க வரும் அனைவரிடத்திலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான குறுஞ்செய்தி இருந்தால் மட்டுமே சினிமா பார்ப்பதற்கு அனுமதி என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இதற்கான பணிகளை திருத்தணியில் திரையரங்கு முன்பு  தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் வந்து சினிமா பார்க்க வந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டனர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்பது 81/- சதவீதம் பேர் என்று தெரிவித்துள்ளார், மேலும் இன்று சனிக்கிழமை, டிசம்பர்-11 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் 14வது கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் நடைபெறுகிறது, இந்த முகாமிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்,

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் மிகப் பெரிய துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட், போன்ற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தேவைப்பட்டால் டாஸ்மார்க் கடைகள், கோயில்கள், ஆகியவற்றில் முன்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அனுமதி என்ற வரையறை  ஏற்படுத்தப்படும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News