திருவள்ளூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
திருவள்ளூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.;
பைல் படம்.
திருவள்ளூர் மாவட்டம், ஆனந்த வல்லிபுரம் என்ற திருவள்ளூர் உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் ஒன்றை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் சுமார் 650.கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர(40) நெல்லூர் அருகே மணப்புரம் கிராமத்தைச் சேர்ந்த குலாம் அப்பாஸ் (30) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள அரசு தானிய கிடங்கில் ஒப்படைத்தனர்.