திருவள்ளூர்: 807 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 807, டிஸ்சார்ஜ் 477, சிகிச்சையில் 4266 நபர்கள்.

Update: 2021-04-23 15:47 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி 23.04.2021 நாளான இன்று ஒரே நாளில் 807 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 54,012 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் இன்று ஒரே நாளில் 477 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுவரை 48,999 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத்துறையினர் இன்று 4 நபர்கள் உயிரிழந்த நிலையில் 747 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 4266 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News