திருவள்ளூர்: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்!
திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள் ஜெயசீலன் முன்னிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணி அன்பு கலந்து கொண்டு தனது கிராமத்திற்கு தேவையான சேவைகளை அதிகாரிகளிடம் விவரித்து அதற்கான கடிதத்தினையும் வழங்கினார்.