திருவள்ளூர்: கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்த பூசாரி கைது

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்த பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-20 03:30 GMT

தற்கொலை செய்து கொண்ட மாணவி மற்றும் பூசாரி.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி. திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதனிடையே, ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாகவும் அதற்கு, பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என வீட்டின் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்ததால் மாணவியின் உறவினர்கள் அவரை ஊத்துக்கோட்டை அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்தில் முனுசாமி என்ற பூசாரியிடம் அழைத்து சென்றனர். அப்போது பூசாரி முனுசாமி அங்கேயே தங்கி இரவு பூஜையில் கலந்து கொண்டால் தோஷம் தீரும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது பூசாரி கூறியதுபோல், உறவினர்களுடன் சென்ற மாணவி ஹேமாமாலினி இரவு ஆசிரமத்தில் தங்கியுள்ளார்

மறுநாள் அதிகாலை, மாணவி ஹேமாமாலினி பூச்சி மருந்து குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். நீண்ட நேரம் கழித்து பூசாரி ஹேமமாலினியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஹேமமாலினியின் பெற்றோர், தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அன்று மேலும் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பூசாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், மாணவி ஹேமாமாலினியை பூசாரி முனுசாமி இரவு பூஜையில் தங்கியிருந்த ஹேமமாலினி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஹேமாமாலினி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து, பூசாரி முனுசாமியை சி.பி..சிஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்தது, தற்கொலைக்கு தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அந்த ஆசிரமத்தில் பலமுறை நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுபோன்ற போலி சாமியார்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News