திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்குவதை கண்டித்து குடும்பத்துடன் தர்ணா !

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-06-10 09:17 GMT

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட பகுதி குடும்பத்தினர்.

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் தாகூர் காலனியில் வசித்து வருபவர் ஆடலரசு. இவர் வசிக்கும் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் செல்லுமாறு அமைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்துக்கு உரிமையாளர் தனது பகுதிக்குள் கழிவுநீர் வராதபடி தடுப்பு சுவர் அமைத்து தடுத்துவிட்டார்.

வீட்டின் முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீர்.

இதனால் அப்பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் குளம்போல் ஆடலரசு என்பவரின் வீட்டின் முன்பு தேங்கியது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் இந்திய நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கழிவுநீர் குட்டையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல வீடுகளில் காய்ச்சல், சளி, சுவாச கோளாறு போன்ற உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. 

ஏற்கனவே கொரோனா இரண்டாவது மக்களை வாட்டி வரும் நிலையில் இதுபோன்ற சுகாதார சீர்கேட்டால் மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்களும் அப்பகுதியில் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்தவுடன் ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு வந்து தெரு மக்களிடையே கழிவுநீர் கால்வாய்கள் வீடுகளின் முன்பு உறை உள்ளதை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கிறோம் என பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு சில வீட்டு உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என தெரிகிறது.

Tags:    

Similar News