ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 108 பால்குடம்

திருவள்ளூர் ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 108. பால்குடத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-09 14:00 GMT

ஸ்ரீ திருவீதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற 17.ஆம் ஆண்டு திருவிழா

ஸ்ரீ திருவீதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற 17.ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 108 பால்குடத்தை கிராமப் பெண்கள் கலந்து கொண்டுஆர்வமுடன் பால்குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட13,-ஆவது வார்டு வள்ளுவர்புரத் தில் அமைந்துள்ள ஸ்ரீ திருவீதி திருக்கோவிலின் 17,ஆம் ஆண்டு விழாவானது ‌ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் திருக்கோவிலிலிருந்து 108.பால்குடம் புறப்பட்டு மாடவீதியாக வலம் வந்து பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு சந்தனம், தயிர், மஞ்சள், தேன், பன்னீர்,ஜவ்வாது, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை நடைபெற்றது.இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு அன்னதானம் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.





Tags:    

Similar News