அனல் மின்நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்

Update: 2023-09-10 04:45 GMT

பைல் படம்

ஒன்றிய அரசின் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தும் வகையில் சிஐடியு சார்பில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு. செப் 15, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட முடிவு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு 3அலகுகளில் தலா 500மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000.க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

10ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொழிலாளர்கள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மீஞ்சூரில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

10.ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என கேட்டு கொண்டனர். நிலக்கரி மற்றும் சாம்பல் துகள்களிலும், ஒப்பந்த தொழிலாளர்கள் சிரமத்துடன் பணியாற்றி வருவதாகவும், விபத்துக்களில் தொழிலாளர்கள் பாதிப்படைவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

ஒன்றிய அரசு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பங்குதாரரான தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். செப்-15, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் தினந்தோறும் 100.தொழிலாளர்கள் என சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியு மாநில துணை தலைவர் விஜயன் தெரிவித்தார்.





Tags:    

Similar News