வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்தனர்
இவர்களுக்கு அரசு உரிமங்கள் ஆன குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லையாம்
திருநின்றவூர் அருகே கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள நடுகுத்தகை பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 13 குடும்பத்தை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் கிடைக்கின்ற கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அரசு உரிமங்கள் ஆன குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். இவர்கள் வீட்டு மனை பட்டா வேண்டி ஆவடி வட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலரிடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நிலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ, சந்தித்து தாங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.