பள்ளி மாணவனை அடித்த ஆசிரியரை சராமரியாக தாக்கிய பெற்றோர், உறவினர்..!
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவனை அடித்த ஆசிரியரை சராமரியாக பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைகிந்த ஆசிரியரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி :
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை ஊராட்சி சூரவாரிகண்டிகையில் குருவராஜகண்டிகை அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு படிக்கும் ஹரிஹரன் என்கிற மாணவனை பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு அடித்ததால், மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் ஆசிரியரை கடுமையாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு திடீர் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு- செவ்வந்தி ஆகியோரின் மகன் ஹரிஹரன். இவர் குருவராஜகண்டிகை ஊராட்சி குருவாட்டுச்சேரியில் உள்ள குருவராஜகண்டிகை அரசு நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில் திங்களன்று பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு, ஹரிஹரனை பிரம்பால் அடித்ததால், ஹரிஹரனுக்கு கைகள் மற்றும் கால்களில் வீக்கம் இருந்துள்ளது. இது குறித்து அறிந்த ஹரிஹரனின் பெற்றோர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஒரு கட்டத்தில் பொதுமக்களின் வற்புறுத்தலின் பேரில், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவனை அடித்த ஆசிரியர் மோகன்பாபுவை பொதுமக்கள் முன்னிலையில் சமாதானம் பேச அழைத்து வந்தார். ஆனால் பொதுமக்கள் அந்த ஆசிரியரை சராமரியாக தாக்கியதால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஆனாலும் பொதுமக்கள் அவரது சட்டையை கிழித்து, அவரை தாக்கியதில் அவர் மயக்கமானார்.
பின் அங்கிருந்த ஆசிரியர்கள், ஆசிரியர் மோகன்பாபுவை மீட்டு, முதலுதவி சிகிக்சை அளித்தனர். பின்னர் அவர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த பாதிரிவேடு போலீஸார் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் அங்கு வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.