அரசு பள்ளியில் பயிலும் நரிக்குறவர் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்..!
பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த100 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது;
தாமரைப்பாக்கத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நரிக்குறவர் இன பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பண்ணுர் கிராமத்தில் இயங்கி வரும் சேஸ்(CHHASE) தொண்டு நிறுவனம் சார்பில் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் நரிக்குறவர் இன மக்களின் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை நரிக்குறவர் இனத்தை சார்ந்த மாணவி, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகப் பை, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன தலைவர் வின்சென்ட் பால் தலைமை வகித்தார்.
ஆசிர்வாதம் முன்னில வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரையும் முன்னாள் கோடு வெளி ஊராட்சி மன்ற தலைவர் குமார் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ், வெங்கல் ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கரன், தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மார்ட்டின், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் முன்னாள் தாமரைப்பாக்கம் கவுன்சிலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற பொன் பழனி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமரன் நன்றி கூறினார்.