ஊத்துக்கோட்டை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-23 05:15 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன், கவிதா கூலி தொழிலாளி இத்தம்பதினருக்கு பவித்ரா(12). மாதவி(10) இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் பவித்ரா 5.ம் வகுப்பும், மாதவி 4ம் வகுப்பும் படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் பவித்ரா வீட்டிலிருந்து வருகிறார். மணிகண்டன், கவிதா ஆகியோர் காலையில் எழுந்து பூ பறிக்க மற்றும் விவசாயி கூலி வேலைக்கு சென்று மாலை வீட்டுக்கு வருவார்கள்.

இந்த நிலையில் பவித்ரா வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது தாய் கவிதா அடுப்பை கவனிக்குமாறு பவித்ராவிடம் கூறியிருந்தாராம். இதனை கவனிக்காமல் பவித்ரா அருகில் இருந்த சக தோழிகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

எப்பொழுதும் வீட்டில் ஒரு வேலை கூட பார்க்காமல் சுற்றி விளையாடும் பவித்ராவை எப்படியாவது வேலை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெற்றோர் பவித்ராவை அழைத்து அடுத்து வருடம் ஆறாம் வகுப்பு முதல் உன்னை அரசு விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க போவதாக கூறியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தாய், தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தான் துப்பட்டாவை எடுத்து ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தன் தங்கை மாதிரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பவித்ரா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

இந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது தொங்கிய நிலையில் பவித்ரா இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால் அங்க பரிசோதித்த மருத்துவர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டுக்கு தாய் தந்தை சொல்லிய வார்த்தை கொண்டு மாணவி கூட்டிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News