தாய் இறந்த துக்கத்தில் மகனும் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

Suicide News -தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-09-16 02:30 GMT

பைல் படம்.

Suicide News -திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மோகன் (18). இவர் தனியார் கல்லூரியில் படித்துவந்தார். இவரது தாய் ராதிகா கடந்த 8 மாதங்களாக உடல்நலம் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில். சிகிச்சை பலனின்றி ராதிகா உயிரிழந்தார் .

இதையடுத்து தாயை நினைத்து மோகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மோகன் படுக்கை அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய தந்தை சுரேஷ், மகன் தூக்கில் பிணமாக கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மப்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அன்பு விரைந்து வந்து போலீசார் மாணவனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் இறந்த சோகத்தில் துட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகன் சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.



 அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags:    

Similar News