அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேர் ஜாமினில் விடுதலை.
பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் எதிரே வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்ப விவகாரத் தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து 6பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கட்சியினரை சந்திக்க விடாமலும், செய்தியாளர்களை சந்திக்க விடாமலும் மாற்று கேட்டில் எதிர் திசையில் அமிரபிரசாத் உள்ளிட்டோர் வாகனத்தை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்ட விவகாரத்தில், பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவருமான அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6பேர் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது 55 அடி உயர கொடி கம்பம் வைப்பது முட்டாள் தனமானது, மக்கள் கண்ணுக்கு தெரியாது,
காக்கா, குருவி உட்கார மட்டுமே கொடி கம்பம் பயன்படும் என நீதிபது கருத்து தெரிவித்தார். தொடர்ந்து சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளருக்கு ரூ.12000 இழப்பீடு வழங்க வேண்டும், மாநகராட்சி இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் நட மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதித்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களை வரவேற்பதற்காக அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புழல் சிறையிலிருந்து வாகனங்கள் வெளியே வரும் நுழைவாயிலில் காத்திருந்தனர்.
இந்நிலையில் கட்சியினரை சந்திப்பதை தவிர்க்கும் வகையிலும், செய்தியாளர்களை சந்திப்பதை புறக்கணிக்கும் வகையிலும் அமர்பிரசாத்ரெட்டி உள்ளிட்டோர் சென்ற ஆறு பேர் வாகனத்தை புழல் சிறையில் வாகனங்கள் உள்ளே செல்லும் மற்றொரு கேட்டின் வாயிலாக வெளியே வரவழைத்து சாலையின் எதிர் திசையில் போக்குவரத்தை தடை செய்து எதிர்திசையில் வாகனங்களை காவல்துறையினர் பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். அமர் பிரசாத்தை வரவேற்பதற்காக சிறை வாசலில் காத்திருந்த கட்சியினர் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர். காவல்துறையினர் இந்த நடவடிக்கை காரணமாக புழலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.