அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல் மின் பராமரிப்பு பணிக்காக காரணமாக 1200 மெ.வா மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Update: 2023-09-15 07:45 GMT

பைல் படம்

பொன்னேரி அருகே வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக மீண்டும் 1200மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு ட்பட்ட அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாகவே கொடுத்து இருந்த நிலையில் இதனை தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகவே போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு காலையில் மின் உற்பத்தி தொடங்கிய சில மணி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.





Tags:    

Similar News