மாற்றுத்திறனாளி பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி

நடக்க முடியாத மாற்றுத்திறனாளியை மாடியில் ஏறவும் இறங்க வைத்து அலைகழித்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-05-19 03:45 GMT

மாற்றுத்திறனாளி பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, காக்கலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் சுமார் 110.81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் காக்களூர் தொழிற்பேட்டையில் 475 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 2.72 கோடி மதிப்பில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தை ஆய்வு செய்து தொழிற்பேட்டையில் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்படுத்தி பராமரித்தட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இந்த நிகழ்வில் ஐபிஎல் எனப்படும் தனியார் நிறுவனத்தில் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்காக 4 கோடியே 14.லட்சத்தி 22 ஆயிரத்து 500 மதிப்பிலான வங்கி கடன் காசோலையை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

இந்த தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், எறையூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வி டி.டி.பி சென்டர் அமைப்பதற்காக ரூபாய் 10 லட்சம் காசோலையை அமைச்சர் அன்பரசனிடமிருந்து  பெற்றார். இதற்காக நிறுவனத்தில் இருந்த குறுகலான படியில் தவழ்ந்தவாறு முதல் மாடிக்கு ஏறிச்சென்று காசோலையை பெற்று பெற்று பின்னர் மீண்டும் படிகளில் சிரமத்துடன்  தவழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடக்க முடியாத மாற்றுத்திறனாளியை முதல் மாடி வரை படியில் ஏறவும் இறங்கவும் வைத்து அலைகழித்த அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மாற்றுத்திறனாளி அவமதிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News